செந்நீரில் கொகுடியோ புத்தக வெளியீடு

book

செந்நீரில் கொகுடியோ புத்தக  வெளியீடு

செந்நீரில் கொகுடியோ?? 

செந்நீர் _ குருதி 

கொகுடி  _அடுக்கு மல்லிகை 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது...  தீடிரென வீல் என்று ஒருவன் அலறும் சத்தத்தில் மொத்த கூட்டமும் சிதறி ஓடியது..  

"கடவுளே இன்னைக்கு  நம்ம கதி அவ்வளவுதான் " என இதயத்தை பிடித்து கொண்டு  மக்கள் அனைவரும் பதறி சிதறி ஓடினர் அந்த கருப்பு நிற எமன் வாகனத்தை கண்டு ... ஒருவர் கார் முன்னால்  உயிரை பிடித்தபடி ஓடி கொண்டிருக்க  , அந்த வாகனம் அவனை விடாது துரத்தியது ..

காக்க ஒருவனும் இல்ல,  வந்த அந்த நபரை அழிக்க எவரும் இல்லையோ??

ஓடியவன் தூரத்தில் போலீஸை கண்ட மகிழ்ச்சியில் உயிரை தக்க வைத்து கொள்ளும் ஆசையில் அந்த நபர் ஓடி போய் .. போலீஸ் கையை பிடித்து கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ..

யார் தம்பி, என்ன விஷயம் எதுக்கு ஓடி வர்ற ?? 

சார் சார் 

சொல்லுப்பா பயப்படாத 

"சார் சார் என்ன காப்பாத்துங்க,  கொல்ல வர்றாங்க என்று மேல் மூச்சு வாங்கி , அவர் பின்னால் பின்னால் திரும்பி பார்க்க ... 

"அட நான் எதுக்கு இருக்கேன் பார்த்துக்கிறேன் தம்பி பயப்படாத "என்ற போலீஸ் கண்களோ பின் கண்ட உருவத்தில் பயத்தில் படபடத்தது.... 

"சார்இஇஇ""" என்று பதறிவன் கண்களும் போலீஸ் கண்ணில் தெரிந்த  ஆக்ரோச உருவத்தை கண்டு நடுங்கி போக.. அவர் முதுகில் ஒரு கால் ஓங்கி மிதிக்க அந்த நபர் அப்படியே முகம் குப்புற கீழ விழ.. 

"ஏம்லே எச்ச நாயே,  சாட்சி சொல்லுதியோ சாட்சி,  உசுரு இருந்தாதானலே அடுத்த விசாரணைக்கு  கோட் வருவ" என்ற குரலில் சர்வமும் ஆடி போனது .. 

"என்ன விட்டிருங்க ப்ளீஸ் ..என்று அவர் கையெடுத்து கும்பிட...

"எமன் கூட கையெடுத்து கும்பிட்டா  விடுவான்டா ஆனா நான் "என்று பல்லை நரநரத்த உருவம் அருவாளை ஓங்கி அந்த நபரின் கழுத்தில் வீச ரத்தம் சீறி வந்து முகத்தில் தெளிக்க  , அதை துடைத்து கொண்டே  சிரித்தாள் அவள் இருள் உலகத்து அரசி !! 

"ஆனா,   நான் எமனை விட மோசமான நவமங்கைடா... என்றவள் ரெட்டை கோர விழிகளில் ரத்தம் குடிக்கும் வெறி... 

"அந்த எமனுக்கும் என்ன பார்த்தா நடுங்கும்" என்றவள் அருவாளில் சொட்டிய ரத்தத்தை அருகே நின்ற காவலர் சட்டையில் துடைத்து கொண்டே ரத்தத்தில் சிவந்த கண்களை புருவம் உயரத்தி அவரை பார்த்து கோணலாக சிரிக்க..

"அக்கா இவன் டிரையின்ல அடி பட்டு செத்து போயிட்டான் அத,  நான் கண்ணால பார்த்தேன்னு சொல்லிடுறேன் , விட்டுடு க்கா" என்று நவ மங்கை காலை அக்காவலன் பிடித்து கொள்ள ..

"அது ஊஊஊ ,  செருப்புல ரத்தக்கறை இருக்கு அதை துடைச்சி விடு உசுருக்கு இணாமா..அவர் வியர்த்த விரல்கள்  மங்கை  செருப்பை துடைக்க 

தூதூஊஊஊஊ நீயெல்லாம் ஆம்பள ,நான் ஆம்பளதேன்னு கழுத்துல போர்ட் வைங்கடா,  பங்களாவுக்கு வந்து காசை வாங்கிட்டு வேலையை விட்டுட்டு ஓடிரு பொட்டை" என்று அவர் நெஞ்சில் ஓங்கி மிதித்தாள் .. 

"ஹாஹா இந்த நவ மங்கை,  கால்ல ஆம்பள விழுந்து கெஞ்சும் போது  அப்படி இருக்கு ... யாராவது இங்க நடந்ததை வெளியே சொன்னா என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க தான் இந்த சம்பவம்" என ரத்த தாண்டவம் ஆடி முடித்த கண்ணை உருட்டிய அரக்கியை பார்க்கவே அத்துனை பேருக்கும் நடுங்கியது... கூட்டம் தெறித்து ஓட உயிரற்ற சடலத்தை ஒற்றை கையில் தூக்கி தோளில் போட்டு கொண்டவள்..  தன் கருப்பு நிற ஊர்தியில் பிணத்தை போட்டு விட்டு , துள்ளி ஏறி டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை கிளப்ப ,  ரத்த புழுதி பறந்து அடங்கியது .. 

அவள் .. மதுரையை ஆட்டிப்படைக்கும் பெண் தாதா , நவமங்கை!!  வயது 33 .. 

இதுவரை அரை சத கொலைகள் செய்து  பயமே இல்லாது மதுரையை வலம் வரும் நவமங்கை  .. அரக்க குலத்தின் தலைவி அவள்!!  பத்து தலை ராவணனின் பெண் பதம் அவள் ... 

பெண்மை என்றால் சாந்தம் 

அவள் சாந்தம் அற்றவள் !!

பெண்மை என்றால் மென்மை,

அவள் மென்மை அற்றவள் !!

பெண்மை என்றால் நளினம் ,

அவள் நளினமற்றவள் 

மொத்தத்தில பெண் உருவத்தில் ஒரு அரக்க அவதாரம் நவ மங்கை!! 

நேரடி புத்தகம் இப்போது j2 publication மூலமாக வெளியிட பட்டுள்ளது 

45 எபிசோட் கொண்ட நேரடி புத்தகம் 

ப்ரீ புக்கிங் செய்தவர்களுக்கு நாளை பார்சல் அனுப்பிடுவாங்க மழையில் காரணமாக தாமதம் ஆகி விட்டது .. 

தொடர்புக்கு 

J2 publication 

+919360530515

7304054168